Thursday, September 08, 2016

மெல்லென நகர்ந்து சென்ற இந்த நெடிப்பொழுதில
உன் கவியின் ரசம் என்னை தழுவி அழைத்தது

ரசனையின். விழும்பில் தத்தழித்துக்கொண்டு
தாளித்த  குழம்பாக கொதித்துக்கொண்டு
இருந்த நாளில். ஒரு நொடி கனியின்
சுவைபோல் பொண்வண்டின் ரிங்காரமாய்..
என் இதையத்தை துளைத்து கொள்கின்றது..
உன் குரல் தரும்  கவி கவிதரும்  கார்மேகத்தின்..
கூட்டமாய் எழுத்தின் ஜாலம்.

பிரபஞ்ச மேகத்தை கிழித்து
யாருடைய கட்டளையுமின்றி
உன் கவிக்காலடியில்.
பரந்த வெளியிலும்
மௌன வழியில்
மௌனமாய் போகின்றேன்.
உன் நினைவு பாதையில்
------------------------------------------
தேடுதலில் வசந்தமாய்
உன் இதயத்தில் கரைந்து
சுவாசக்குழாயில் இசையோடு
சங்கமமாகி உன் அத்வைதத்தில்
நீராடி மகிழ்கின்றேன்

உன் கையில் மந்திரக்கோலா
கவிதையில் மட்டுமல்ல
உன்னுள் விழுந்து விட்டேன்.

இதிகாசத்தில்.நீ அதிசையக்கருவியாக
உன்னோடு இருக்கும் நேரம்  எனக்கு
ஏகாந்தமாக  உயிரே..எங்கே வசிக்கின்றாய்
கரைந்தோடுகின்றது..விழியில் நீராக
மெய்தீண்டும் கனவாக தீண்டிப்பார்க்கின்றேன்.
என் ஜீவனில் உன்னை வைத்து
இசைக்கின்றேன்...
இனி மலரும் ஆண்டு நிமிடம்
வினாடிகள் உனக்கும் எனக்குமாய்
.இசையும்; கவியுமாய்.
நீயும் நானும் கரைந்து
பறந்து வானம் தொடுவோம்
என்றும் உன்னுள் நானாக....
--------------
உன் கவிதை என்னுள்
இசைகின்ற புலாங்குழல்
இனி என் இசையில் நீ வாழ்வாய்

எந்தபாதை யெனதெரியாது
இருஜோடி கைகோர்த்து பறக்கின்றது
இருமனங்கள் ஒன்றாகி
இனம்புரியாத இடத்தில் சங்கமிக்கிறது
எதுவென காலம் சொல்லும்
அதுவரை மரகதவீணையில்
தலைய் சாய்வோம்.