Thursday, October 20, 2005

உறவுக்கு உரிமை

என்னை பிரிந்து. விண்ணுலகம் சென்ற என் பெற்றோர்
உறவுக்கு உரிமை


உறவுக்கு உரிமை தருவது.
பெற்றோர் ஒன்றே....
எத்தனை உறவுகள் வந்தாலும்..
அத்தனையும் நடிப்பே..

நம்மை சுமந்து நமக்கே.
வாழ்ந்து.
நம்மோடு மடிந்து போவது
பெற்றோர் தான்.
வருபவர்கள் புரியாதவர்கள்
வந்தவர்கள் தெரியாதவர்கள்
சேர்ந்தவர்கள் ஒட்டிக்கொள்ளாதவர்கள்-

என்பதால்....

அன்புக்கும் பண்புக்கும்
அரவனைப்புக்கும்
துயரத்தில் தலைசாயவும்
நம்பெற்றோரே நமக்கு..
உரிமையானவர்கள்
rahini

Friday, October 14, 2005

தீபாவளி இரண்டில் உன் முகம்


தீபாவளி இரண்டில் உன் முகம்



என்னை...எண்ணையாக்கி
தினம் தினம். நான் தீபம்
ஏற்றுகின்றேன்
ஏன் தெரியுமா....?

அதில் உன் முகம் தெரிவதை
காண்பதற்கே...
என்னை விட உன் நலம் விரும்பி

என்னை எண்ணையாக்கிக் கொண்டு
இருக்கின்றேன்

நான் வாழ்வதை விட
உன் வாழ்வில் இன்பம் காண
ஆசை கொண்டேன்
அதனால் தான் என்னை

எண்ணையாக்க விரும்பினே;

---
நான் இப்போ.. அதிகமாக...
கடிகாரம் பார்க்கின்றேன்
காரணம்...
உன் வரவை எதிர் பார்த்து
ஆனால் நீ.. என்னை
ஏமாற்றிய நேரங்களைத்தான் கடிகாரம்
எனக்கு காட்டுகிண்றது

செல்லமே..
இந்தத் தீபாவளியோடாவது
நீ...என்னை...முழுப் பவுர்ணமியாக்கிவிடு.

அன்பே..
வானத்தில் இருக்கும் நிலவு
தேயற்றும்
ஆனால் நிலவாக உன் இதயத்தில்
இருந்துஒளி வீசும் என்னை தேய விடாதே...
இதுவே.. நீ..எனக்கு தீபாவளிக்குத் தரும்
புதிய ஆடை.என நான்
நினைத்துக்கொள்வோன்.

rahini