Thursday, October 20, 2005

உறவுக்கு உரிமை

என்னை பிரிந்து. விண்ணுலகம் சென்ற என் பெற்றோர்
உறவுக்கு உரிமை


உறவுக்கு உரிமை தருவது.
பெற்றோர் ஒன்றே....
எத்தனை உறவுகள் வந்தாலும்..
அத்தனையும் நடிப்பே..

நம்மை சுமந்து நமக்கே.
வாழ்ந்து.
நம்மோடு மடிந்து போவது
பெற்றோர் தான்.
வருபவர்கள் புரியாதவர்கள்
வந்தவர்கள் தெரியாதவர்கள்
சேர்ந்தவர்கள் ஒட்டிக்கொள்ளாதவர்கள்-

என்பதால்....

அன்புக்கும் பண்புக்கும்
அரவனைப்புக்கும்
துயரத்தில் தலைசாயவும்
நம்பெற்றோரே நமக்கு..
உரிமையானவர்கள்
rahini

14 comments:

நளாயினி said...

ம் அம்மா அப்பாபோல யாருமே வரமாட்டார்கள். எனது அம்மா அப்பாவோடு ஒரு நாள் குhட நான் கதைக்காமல் இருந்தவள் அல்ல. ஆனால் கடந்த 8 மாதமாக கதை பேச்சே இல்லை. அத்தனை பிடிவாதம்.அவர்களின் செல்லம். ஆனதால் இத்தனை பிடிவாதம். அவர்கிளின் பிடிவாதம் எனக்கும் இல்லாமலா. நல்ல கதை.நானும் கதைக்கவே இல்லை.சரஸ்வதிப் பூசையோடு ஒன்றானோம். அம்மா அப்பாவோடு தான் உரிமையோடு சண்டை செய்யவும் சமரசம் ஆகவும் முடியும்.மற்றவர்களோடு எல்லாம் அளவாக இருத்தல் நல்லது. உங்களின் கவிதை பொருள் மிக நன்றாக உள்ளன. ஆனால் கொஞ்சம் கவிதையை அழகு படுத்தலாமே. முயற்சியுங்கள். உங்களால் முடியும்.

வீ. எம் said...

நல்லதொரு கவிதை ராகினி அவர்களே!

rahini said...

நன்றி நளாயினி. வீ எம்

எனக்கு அம்மா. அப்பா.. என்றால் கானும்
அவர்கள் என்னை செல்லமாக வளர்த்து என்னை நல்ல நிலையில் கொண்டுவந்தார்கள்
ஒருநாள் கூட என்னை திட்டியதோ.அடித்ததோ.. இல்லை.
அவர்களுக்கு நான் செல்லக்குட்டி என்பதாலும் ஒரே ஒரு பெண் என்பதாலும்
என்னை அன்பை மட்டும் தந்து வளர்த்தார்கள் என் அண்ணா..இருவரும்
என் இரண்டு கண்கள் ஆனால்
இப்போ.. எனக்கு அவர்களின் மடியில் உறங்கவேண்டும் என்ற ஏக்கம்
நான் போனால்தான் முடியும் இல்லை நான் செயற்க்கையாக போக வேண்டும்
காரணம் என் அப்பா இறந்து ஆறுமாதத்தால் என் அம்மாவும் சென்றுவிட்டா.
அவர்களை பிரிந்து 2 வருடமாகி விட்டது

U.P.Tharsan said...

உயிர்பான சொல் வருத்தம் வேண்டாம்.

rahini said...

நன்றி. உங்கள் வருகைக்கு.

Unknown said...

தந்தை தாய் பற்றிய நினைவுகளை பசுமையாக தந்த உங்களுக்கு வாழ்த்துக்களும் நன்றியும்

rahini said...

nanri elakkiyan

N Suresh said...

//உறவுக்கு உரிமை தருவது.
பெற்றோர் ஒன்றே....
எத்தனை உறவுகள் வந்தாலும்..
அத்தனையும் நடிப்பே..//

உண்மைதான் - ஆனால்
எத்தனை பேர்
முதியோரில்லத்தில்
கண்ணீரை அணைகளை
கட்டிக்கொண்டு
நினைவுகளின் கவலைகளோடு
உலகெங்கும்

நடிப்பில்லாத
மனிதர்கள் தான்
இந்த முதியோர்களை
நேசிக்கிறார்கள்


//நம்மை சுமந்து நமக்கே.
வாழ்ந்து.
நம்மோடு மடிந்து போவது
பெற்றோர் தான்.
வருபவர்கள் புரியாதவர்கள்
வந்தவர்கள் தெரியாதவர்கள்
சேர்ந்தவர்கள் ஒட்டிக்கொள்ளாதவர்கள்-//

எல்லோரும் செல்பவர்கள்
தான்
கசப்பென்றாலும் - அது
உண்மையே!

//என்பதால்....

அன்புக்கும் பண்புக்கும்
அரவனைப்புக்கும்
துயரத்தில் தலைசாயவும்
நம்பெற்றோரே நமக்கு..
உரிமையானவர்கள் //

தாய்மையுள்ள
மனிதர்கள் இருக்கும்வரை
இந்த பூமியில்
பாசத்திற்கு
பஞ்சமேது?

வாழ்த்துக்கள்
என் சுரேஷ்

rahini said...

நன்றி சுரேஸ் அன்புக்கு முதல் இடம் தாய்.

தினேஷ் said...

உறவுகளை உணர்த்தும் உயர்வான கவிதை...

தினேஷ்

rahini said...

en amma apaavin padam en nanri dinesh

Anonymous said...

அழகான கவிதை...

50 வருடங்களூக்கு முன் சரி..
இந்த் தலைமுறையில்???
கேள்விக்குறி தான் மிஞ்சும்
ஏனென்றால் பிள்ளையின் எதிர்பார்ப்பை நிறைவேற்றினால் பாசம், உரிமை எல்லாம் நடக்கும். இல்லையென்றால் பிள்ளையின் சுயநலமே ஓங்கி நிற்கும். இது என் அனுபவத்தில் உணர்ந்தது.
அனுபவப்பூர்வமாக எழுதியுள்ளீர்கள் ராகினி மேடம். வாழ்த்துக்கள்.

rahini said...

nanri ungkal varukaikku

சம்சுதீன் said...

அருமையான கவிதை