Thursday, September 08, 2016

மெல்லென நகர்ந்து சென்ற இந்த நெடிப்பொழுதில
உன் கவியின் ரசம் என்னை தழுவி அழைத்தது

ரசனையின். விழும்பில் தத்தழித்துக்கொண்டு
தாளித்த  குழம்பாக கொதித்துக்கொண்டு
இருந்த நாளில். ஒரு நொடி கனியின்
சுவைபோல் பொண்வண்டின் ரிங்காரமாய்..
என் இதையத்தை துளைத்து கொள்கின்றது..
உன் குரல் தரும்  கவி கவிதரும்  கார்மேகத்தின்..
கூட்டமாய் எழுத்தின் ஜாலம்.

பிரபஞ்ச மேகத்தை கிழித்து
யாருடைய கட்டளையுமின்றி
உன் கவிக்காலடியில்.
பரந்த வெளியிலும்
மௌன வழியில்
மௌனமாய் போகின்றேன்.
உன் நினைவு பாதையில்
------------------------------------------
தேடுதலில் வசந்தமாய்
உன் இதயத்தில் கரைந்து
சுவாசக்குழாயில் இசையோடு
சங்கமமாகி உன் அத்வைதத்தில்
நீராடி மகிழ்கின்றேன்

உன் கையில் மந்திரக்கோலா
கவிதையில் மட்டுமல்ல
உன்னுள் விழுந்து விட்டேன்.

இதிகாசத்தில்.நீ அதிசையக்கருவியாக
உன்னோடு இருக்கும் நேரம்  எனக்கு
ஏகாந்தமாக  உயிரே..எங்கே வசிக்கின்றாய்
கரைந்தோடுகின்றது..விழியில் நீராக
மெய்தீண்டும் கனவாக தீண்டிப்பார்க்கின்றேன்.
என் ஜீவனில் உன்னை வைத்து
இசைக்கின்றேன்...
இனி மலரும் ஆண்டு நிமிடம்
வினாடிகள் உனக்கும் எனக்குமாய்
.இசையும்; கவியுமாய்.
நீயும் நானும் கரைந்து
பறந்து வானம் தொடுவோம்
என்றும் உன்னுள் நானாக....
--------------
உன் கவிதை என்னுள்
இசைகின்ற புலாங்குழல்
இனி என் இசையில் நீ வாழ்வாய்

எந்தபாதை யெனதெரியாது
இருஜோடி கைகோர்த்து பறக்கின்றது
இருமனங்கள் ஒன்றாகி
இனம்புரியாத இடத்தில் சங்கமிக்கிறது
எதுவென காலம் சொல்லும்
அதுவரை மரகதவீணையில்
தலைய் சாய்வோம்.

Tuesday, September 01, 2015

அன்பே காதல் கொள்
என்னை கொள்ளாதே
சுகங்களை அறி ஆனால்
அளந்து கொள்ளாதே-
ஆணிவேரோடு பிடுங்கி 
 காதலை உன் காலடியில் 
நாட்டுவிட்டேன் 
காதல் கொள் கொள்ளாதே
தவனையிட்டு காதல் கொள்ளாதே
சுடும் பனி தலையில் விழுவதுபோல்
இதயம் வலிக்கிறது
காலவரை அற்ற விசா கொடு
என் காதலை கொள்ளாதே...
பார்க்கவில்லை விழிகள்
தொலைவில்  நீ..இதயம் 
இடம்மாறிக்கெண்டது.
என் செய்ய என் உயிரே
நீ..மட்டும் வேண்டும்
வழி சொல் வலி தாராதே.
வா....வானம்தாண்டி செல்வோம்
உன் பார்வை உன் நேசம் 
உன் காதல் உன் வாழ்கை
எல்லாம் நானக மாற வரம் கிடப்பேன்
வா...
என் பெயரை அழைக்கின்றாய்
உன் அருகில் இருப்பது போல்
உணர்கிறேன்
ஜயோ..என்னை கொள்ளாதே
காதல் கொள் 
நீ..அழகா? இல்லை நல்லவனா?
என தெரியாது புரியாது
ஆனால் வேண்டும்நீ...
வா...காதல் செய்வோம்
வா வாழ்வை தொடர்வோம்
 வா என் உயிரே வா.

https://www.youtube.com/watch?v=IEpxyDgj-Ys&feature=share

Saturday, September 14, 2013

ஜரோப்பிய தமிழ் வானொலியில் இடம்பெறும் என் நிகழ்சிகள்

மதியம் 12..முதல் 01 வரை இசையின்மடியில் மதியம் 1.30 முதல்...3.00 மணிவரை பூந்தெண்றல் (புதியபாடல்களுக்கு கவிதை இணைத்து தொகுத்து வழங்குவது) இரவு 11...முதல் 12 மணிவரை இரவின் துயில் கேட்டு மகிழ இங்கே...ETR மற்றும் இங்கேIsaiyin Mdiyil and Iravin Thuyil -

Thursday, October 15, 2009

தேன் மதுரக்குரலோன் டி.எம்சௌந்தர்ராஜன்பிறந்தநாள்அன்றுநான்அவரோடுபேசிமகிழ்ந்த
சிலநிமடத்தைஉங்களோடுபாகிந்துகொள்கின்றேன்
கேட்டுமகிழஇங்கேசெல்லவும்.
https://archive.org/details/Isaiyin-Mdiyil

பிரபல தமிழ் பின்னணி பாடகர் டி எம் சௌந்தராஜன்அவரின் பிறந்தநாளைமுன்னிட்டு இன்று
24-3-11

ஜரோப்பிய தமிழ்வானொலியில் என் இசைமடியின் நிகழ்ச்சியில் சிறப்புநிகழ்சி தொகுத்து வளங்கினேன்...கேட்டுமகிழஇங்கே அழுத்தவும்.டி எம் சௌந்தராஜன்https://archive.org/search.php?query=rahini%20AND%20collection%3Aopensource_audio

கனவுகள்சிதைந்தன
என்ற தலைப்பில்.என்சிறுகதை..புத்தக வடிவில் இங்கே...வொளியாகியுள்ளது படித்து மகிழவும். 72 பக்கத்தில்சென்று பார்வையிடவும்

http://kaatruveli-ithazh.blogspot.com/


தென்இந்தியா-நடிகை ஜெயலலிதை அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கா
ஜரேப்பியத்தமிழ் வானொலியில்...இசையின் மடியில் நிகழ்ச்சியில்
நான் தொகுத்துவளங்கி நிகழ்ச்சி அவர் பாடிய பாடல்களும் அவர் நடித்த படங்களில். இருந்தும் மனதை மயக்கும் பாடல்கள் கேட்க இங்கே.....ஜெயலலிதை
---------------------

பின்னனிப்பாடகரும் நடிகருமான மலேசியாவாசுதேவன் அவரின் ஆத்மா சாந்தியடைய.இறைவணை வேண்டி ஜரேப்பியத்தமிழ் வானொலியில்...இசையின் மடியில் நிகழ்ச்சியில் அவர்பாடியபாடல் களை தொகுத்துவளங்கினேன் கேட்டு மகிழ இங்கே செல்லவும்.மலேசியாவாசுதேவன்




ஜரோப்பியத்தமிழ் வானொலியின் ஏழாவது அகவையில் கால் பதித்ததினம். அறிவிப்பாளர்கள் யாவரும் இப்படத்தில்.மிகுதி படத்தை பார்வையிட.இங்கே செல்லவும்.http://www.tamilfm.eu/ETR

Thursday, April 30, 2009

எனது 25 நிகழ்ச்சிகள் ஓரே சீடியாக வெளிவந்துள்ளது

பின்னனிப்பாடகரும் நடிகருமான மலேசியாவாசுதேவன் அவரின் ஆத்மா சாந்தியடைய.இறைவணை வேண்டி ஜரேப்பியத்தமிழ் வானொலியில்...இசையின் மடியில் நிகழ்ச்சியில் அவர்பாடியபாடல் களை தொகுத்துவளங்கினேன் கேட்டு மகிழ இங்கே செல்லவும்மலேசியாவாசுதேவன்




எனது வானொலி நிகழ்ச்சிகள் (100) ஓரே சீடியாக வெளிவந்துள்ளது
நிகழ்ச்சி தொகுப்பை நீங்கள் தொடர்ந்து 18 மணித்தியாளமும் 30 நிமிடங்களும் கேட்கலாம்
இலவசமா
பெற்றுக்கொள்ள தொடர்புகொள்ள வேண்டிய முகவரி.kavithaikuyil@gmail.com
வானொலி நிகழ்ச்சிகளை நீங்கள் கேட்டு மகிழ. தொடர்பு கொள்ள வேண்டிய தெலைபேசி இலக்கம் new 004915225831756

கேட்க முடியாத நேயர்களுக்கு ஒலிப்பதிவு அனுப்பி வைக்கப்படும்.
http://www.esnips.com/web/ENDRUMINIYAVAI
----------------------------------------
(new)---அன்பு நேயர்களுக்கு என் வானொலி
நிகழ்ச்சிகளை வாரம் தோறும் ஜரோப்பியதமிழ் வானொலி
ETR ல் மதியம் 12 முதல்1 வரை கேட்டு மகிழவும்.




Tuesday, June 06, 2006

ராகினியின் கவிதைப் பூங்கா.


என் கவிதைகளை திருடி எடுப்பவர்கள் என் பெயரோடு போடவும் எழுதுவது என்பது சுலபமல்ல.எண்னங்களை சிறகு விரித்து
தமிழைத் தேன் போல் சுவைக்கும்..
போது
அந்த தமிழை கவி தொடுத்து

இந்தக் கவிதைப் பூங்காவில்
உங்கள் முன் மலரவிடுகின்றேன்.
அன்புடன்ராகினி
ஜேர்மன;


ttp://makimai.blogspot.com/

kavithaikuyil@gmail.com

தாய் தமிழ் மண்னை உயிராய் நேசிப்போம்
வணக்கம் தமிழ் தமிழ் மண்ணே வணக்கம்
வந்தோரரை வாழ வைத்த தமிழ் மண்னை 
உயிராய் நேசிப்போம்...

புலம் பெயர்மண்னை நேசித்து நேசித்து
உடல் தளர்ந்து மடிந்து போவதை விட 
தயின் கருவறையில் இருந்து தொப்புள் கொடி...
அறுந்து முத்தமிட்ட மண்னை 
தழிழ் தாய் போல் உயிராய் நேசிப்போம்

சங்கம் முழங்க தமிழ் இசைக்க..
மண்னை வாழ்த்தி புகழ் பாட
தமிழன் என்றும் தொடர்ந்து கொண்டே இருப்பான்!
வேரோடு பிடுங்கி எறிந்தாலும்
ஆணிவேரில் இருந்து வளர்வான் தமிழன்
வேலண்மையை தொழிளாக கொண்டு உளுது வாழ்த மண்னை
தலை நிமிர்ந்து தெளிவாய் வாழ்த்தி பாடுவான் தமிழன் 
தாய் தமிழ் மண்னை உயிராய் நேசிப்பான் .

வந்தேறு குடியினர் நம் மண்ணை மிதித்தாலும் 
நம் தாய் மண்னை என்றும் உயிராய் நேசிப்போம்.

ஆலயம் சென்று நெற்றியில் குறியிட்டால் அது திருநீறு
சொந்த நாடு சென்று நெற்றியில் மண்ணை குறியிட்டால்
அது தாயின் கருவறை 

ஒடுக்கப்பட்டு துரத்தப்பட்டு அகதியாய் அலைந்து திரிந்தாலும்
பிறந்த மண் வாழவைக்கும் நம் பசியை போக்காட்டும் .

துருப்பிடித்த கப்பலில் பயணம் செய்தாலும்
துணிவோடு புறப்படுவோம் தமிழ் தாய் மண்னை உயிராய் நேசிக்க.


Wednesday, March 01, 2006

காதல் தினம். 14 .2 11


காதல் தினம். 14 .2 12
------------------
இருந்தேன்
தனிமையில் சிறையில் சிலகாலமாய்
வாழ்ந்தேன்
என்னை நான் தேடிக்கொள்ளும் போது
எங்கோ இருந்து என்னை அழைத்தாய்
யார் நீ....?
உன் பெயர் என்ன ?
உனது ஊர் எது ?
என்று நினைத்து கேள்வி தொடுப்பதற்குள்
என் அனுமதி இன்றி என் இதயத்தை திருடி
உனது இதயத்தில் பூட்டிக்கொண்டாய்.
அந்த நிமிடப்பொழுதில்
எனக்கும் தெரியாமல்.
மெல்ல மெல்ல நடக்க தொடங்கினேன்
உனது குரலை கேட்டு சிந்தனைகளை பறக்கவிட்டு!
எனக்குள் போறாட்டதை எழுப்பி!
என்னை நான் திரும்பி பார்த்தநொடிப்பொழுதில்!
புடவைக்கடைக்குள் நின்றுதிக்குமுக்காடினேன்"
அந்த நிமடத்தில்""""என்னை உனக்கே அர்பணித்தேன்
மனதால்
உன்னிடம் சொல்லாமல்
காதல் பரீச்சையில் தோற்றுவிடுவேனா:.
என்றபயத்தில் காதலை சொல்ல தயங்கினேன்.
யார் நீ.. என்று தெரியாமல் தவித்தேன்!
வொதும்பி துடித்தேன்!
விழிகள் தேடத்தொடங்கியது
உதடுகள் பேசத்தயங்கியது
காதல் பரீச்சையை உன்னிடம் விட்டேன்
ஏழாம் அறிவாக.
நீயும் தயங்கினாய்...நானும் தயங்கினேன்-
இருவரும் முடிவின்றி தயங்கும்போது...
நானே உன்னிடம் கூறமுற்பட்டேன்
முடியவில்லை!
உன்னை பிரியும் சில மணிநேரத்தை
கண்டு கண்டு வொதும்பி
அழத்தொடங்கும் நிமிடத்தில் என் காதலை சொன்னேன்.
சொன்ன நிமிடத்தில் இருந்தே
என் உடல் உயிர்அத்தனையும் உனது பொறுப்பு
என சொல்லி விடைபெற்றேன்
சிறகொடிந்த பறவைபோல்
திசைமாறி பயணித்தேன்
பயணிக்கும் ஒவ்வொரு நிமிடமும்
புழுவாக துடித்தேன்.
பார்வையிடும் விழிகள் நான்கும்
கண்ணீரில் மதிக்கும் நேரம்
கரைந்தோடும் கண்ணீiரை
வாணத்தில் இருந்து மழையாக பொழிந்தேன் நீ..இருந்தகடற்கரையில்;
தேடுகின்றேன் உன்னை மட்டும்
நேசிக்கின்றேன் உன்னைமட்டும்
சுவாசிக்கின்றேன் உன்னை மட்டும்
முதல்வசந்தம்
முதல் முத்தம்
முதல் வார்த்தை
முதல் கவிதைஎல்லாமே நீ எனக்கு
காலத்தை கடந்து செல்லாதே
நேரத்தை மறந்து செல்லாதே
நாற்களை விழத்தி செல்லாதே
இதுவரை நீ இருந்த திசை மறந்து
இனி வரும் திசையை கண்டு மகிழ்வு அடைந்துகொள்
உன்னை என்னி வழும் என்னை
மறந்துவிடாதே
உன்கையில் என்னை எடுக்கும் வரை
மறந்து தூங்கிவிடாதே
நேசத்தை தெழிவு படுத்த
காதலளர் தினம் தேவையில்லை
நம் இருவர் மனமும் தெளிவாக இருந்தால்
போதும் நமக்கு தினம் தினம் காதலர் தினம் தான்.
காதல் தினம். 14 -2-11

என்உயிராணவனே!
என் இல்லத்தில் பதிந்தது உனது கால் மட்டுமே
என்உள்ளத்தில் பதிந்தது..உன் இதயம் ஒன்றே.

அந்த நிமிடத்தில் புதிவித கனவுகள்
அலை அலையாய் கரைசேர..
வெளிவரும் மூச்சு உன்னை சுற்றி வட்மிட
இரவுகள் எல்லாம் உறக்கம் தொலைய
பரந்த வெளியில் கால்கள் நடமிட
பூமியை தொடும் வாணத்தின் ஓரமாய்
உன்முகம் தெரிந்தது.

திகட்டாத இன்பத்தில் சுகங்களை முடிவின்றி
மீட்டிக்கொள்ள உன் துணை தேடினேன்.
உனது விழியும் எனது விழியும்
பார்வையிடும் நொடிப்பொழுதில்!!!!
நீயும் நானுமாய் ஒருவருக்குள் ஒருவாராக...
கரைந்து கொண்டோம்.
அந்தநொடிப்பொழுதில் உன்னையும் என்னையும்...
அறியாது நமக்குள்ளே காதல்..உருவானது.

மொழிகள் மௌனமாகி புதுவேதம் பிறந்திட
ஒருவருக்குள் ஒருவாராக இடம் மாறிக்கொண்டோம்.
நீபாதி நான்பாதியாக!
சொல்லத்துடிக்கும் உணர்வுகளை உதடு தடுத்துக்கொள்ள!
இருவிழியும் உற்று நோக்கையில்..
மனம் என்ற மணமேடையில் உற்காரத்துடித்தோம்!!

காதல் இல்லாத வாழ்வுதனையும் நீ..இல்லாத வாழ்வுதனையும்
நினைத்துபார்க்கும் பொழுது மழையே..
இல்லாத வறண்டபூமி பிளந்தது போல்..
என் இதயம் பிளக்க கண்டேன்!!!!!

ரசித்துவாழ காதல் வேண்டும்
இணைந்து வாழ...நீ வேண்டும்...
என்பதால்
உன்னை கைபற்றிக்கொண்டேன்..
இன்றுபோல்..என்றும் உன்னோடு
இனைந்திருப்பேன்.





காதல் தினம். 14 -2-10
-------------

காதல் என்றும் சுகமாக
..
நினைவுகளும் கனவுகளும்
இன்பமாக
...
புதிய பூமியில் புதிதாக..
பிறந்ததுபோல்

பிறக்கும் இரவெல்லாம்

தொலையும் தூக்கம்
விண்ணில் பிறக்கும்

உணர்வுகள் தொட
...
வாழ்வில் இன்பம்
அலையாய் வந்திட
..
சுமைகளை மாறி
சுமக்கும் போது

சுகமாய் கால்கள்
நடந்திடும் பாதையில்.

வறண்ட பூமியில்
பச்சை
புல் முளைத்திட..
இரு உயிரும் ஒன்றாய் ..
இணைந்து

புதிய பூமியில்
..
புதிதாய் ஒரு ஜனனம்
பிறந்திட
...
காலம் கடந்ததும்
சண்டைகள் மோதிக்கொள்ள

வருடத்தில் ஒருநாள்
இன்பமாய் வாழ..
வழி விட்டுக் கொடுக்கின்றது
காதல் தினம்.
------------------

காலமெல்லாம் நீ..வேண்டும்

என்னதான் இருக்கு உன்னிடம்
மீண்டும் மீண்டும்..சிந்தித்தால்
விடை தெரியவில்லை.

காரணம்...எதை என்று
சொல்வது
வாழ்க்கை ஒடும்போதும்
உன் நினைவுகள்தான்...
என் இதயத்துடிப்பில்
அதிகமாய் ஓடுகின்றது.

ஏன்...
என் நாடித்துடிப்பிலும் கூட
நீயே...தான் வாழ்கின்றாய்


சோகம் வாட்டும் போதும்.
ஓ... என்ன சோகம் என்கின்றாயா....?

உன்னை பிரிந்த சோகம்...
வாட்டும் போதும்.
உன் சுகமான நினைவுகள்
என்னை சுகமாக்கி...
செல்கின்றது.

என் செல்லமே..

இடை வெளி இல்லா..
மழை நீர்..போல்
என் வாழ்வில் நீ..வேண்டும்.

எப்பவும் எனக்கு சலிக்காத..
பொருள்.. அது நீ..என்பதால்.
சலிப்பே...இல்லாமல்.
உன் இதழ் சிந்தும் கவிதையில்
காலமெல்லாம்.
நான் வாழ..என்னருகில்
நீ..வோண்டும்.

ராகினி
ஜேர்மன்