Tuesday, June 06, 2006

ராகினியின் கவிதைப் பூங்கா.


என் கவிதைகளை திருடி எடுப்பவர்கள் என் பெயரோடு போடவும் எழுதுவது என்பது சுலபமல்ல.எண்னங்களை சிறகு விரித்து
தமிழைத் தேன் போல் சுவைக்கும்..
போது
அந்த தமிழை கவி தொடுத்து

இந்தக் கவிதைப் பூங்காவில்
உங்கள் முன் மலரவிடுகின்றேன்.
அன்புடன்ராகினி
ஜேர்மன;


ttp://makimai.blogspot.com/

kavithaikuyil@gmail.com

தாய் தமிழ் மண்னை உயிராய் நேசிப்போம்
வணக்கம் தமிழ் தமிழ் மண்ணே வணக்கம்
வந்தோரரை வாழ வைத்த தமிழ் மண்னை 
உயிராய் நேசிப்போம்...

புலம் பெயர்மண்னை நேசித்து நேசித்து
உடல் தளர்ந்து மடிந்து போவதை விட 
தயின் கருவறையில் இருந்து தொப்புள் கொடி...
அறுந்து முத்தமிட்ட மண்னை 
தழிழ் தாய் போல் உயிராய் நேசிப்போம்

சங்கம் முழங்க தமிழ் இசைக்க..
மண்னை வாழ்த்தி புகழ் பாட
தமிழன் என்றும் தொடர்ந்து கொண்டே இருப்பான்!
வேரோடு பிடுங்கி எறிந்தாலும்
ஆணிவேரில் இருந்து வளர்வான் தமிழன்
வேலண்மையை தொழிளாக கொண்டு உளுது வாழ்த மண்னை
தலை நிமிர்ந்து தெளிவாய் வாழ்த்தி பாடுவான் தமிழன் 
தாய் தமிழ் மண்னை உயிராய் நேசிப்பான் .

வந்தேறு குடியினர் நம் மண்ணை மிதித்தாலும் 
நம் தாய் மண்னை என்றும் உயிராய் நேசிப்போம்.

ஆலயம் சென்று நெற்றியில் குறியிட்டால் அது திருநீறு
சொந்த நாடு சென்று நெற்றியில் மண்ணை குறியிட்டால்
அது தாயின் கருவறை 

ஒடுக்கப்பட்டு துரத்தப்பட்டு அகதியாய் அலைந்து திரிந்தாலும்
பிறந்த மண் வாழவைக்கும் நம் பசியை போக்காட்டும் .

துருப்பிடித்த கப்பலில் பயணம் செய்தாலும்
துணிவோடு புறப்படுவோம் தமிழ் தாய் மண்னை உயிராய் நேசிக்க.