Wednesday, September 28, 2005

காதலர் தினம்...05


காதலர் தினம்...05

உன்னிடம் காதல் கொண்டதால்
பிறந்த பயனை அடைந்தேன்
உனை சந்திக்கும் போதெல்லாம்
என்னை உணர்ந்தேன்.

மனதை திறந்து மனச்சாட்சியை
கேட்டபோது பரந்த மனதுடன்
உன் காதல்வெளிப்பட்டது.

உன் பேச்சும் உன் சிரிப்பம்
உன் குறும்பும்கேட்டபோது
என் மனம் கெஞ்சியது
உன் முகம் கான...
இதுவரை..யாரையும் விரும்பாமல்
இருந்தேன்.

இதயத்தின் கதவை இறுகப் பூட்டிவைத்தேன்
எங்கிருந்தே..வந்தாய்.....
எனை அழைத்தாய் எனை கவர்ந்தாய்
என் இதயப் பூட்டைஉடைத்து
எனக்குள் காதலை வளர்த்தாய்
நம்காதலுக்கு காதலர்தினத்தில்
முத்திரை பதிக்கின்றேன்
நித்திரையின்றி.

அன்பே..காலை எழுந்து தபாலை எதிர்பார்க்கின்றேன்
உன் காதலர்தின பரிசுக்காய்.

rahini.germany

Tuesday, September 27, 2005

என் உயிர்






என் உயிர்

உன் அன்பே.
என் வெளிச்சம்

உன் காதல்
எனக்கு காவல்

உன் பேச்சு..
எனக்கு..இன்பம்

உன் குரல்..
என் தேடல்

உன் நலம்.
என் நிம்மதி

உன் நிம்மதி.
என் சந்தோசம்

உன் உயிர்...
அது என் உயிர்.

ராகினி

Wednesday, September 07, 2005

முகம் காட்டு


முகம் காட்டு



வெள்ளி நிலவே முகம் காட்டு

வீசும் தென்றலே நான் சேர.....

வழி சொல்லு.


என் விழிகள் உனை தேடும்போது....

சில நிமிடம் தடைபோடுகின்றது

எனதுள்ளம்.


வஞ்சமில்லா நெஞ்சை ஊமை
மொழிபேச வைத்தபோது...

என் கண்கள் தடை இன்றி

நீர் பெருகின்றது.


இறைவணிடம் உயிரைக்கொடுக்க

முயன்றேன்
மறுகணம் உன் உயிருடன் கலக்க

ஏங்குகின்றேன்

உன் இதழின் அழகை சிரிப்பில்

கண்டேன்

உன் பெயரை ஏட்டினில்

எழிதிக்கொண்டேன்

விழிகள் மூட மறுக்கின்றது

உன் நினைவு பசியை

மறைக்கின்றது

ஓடும் நதியல் உன் முகம்

பார்த்தேன்

அள்ளிப்பருகையில் நீ.....தவறியது

ஏனோ.....?

உனை இதயத்தில் சுமந்ததால்....

நான் வறண்டகுளத்தில்

வாடியதாமரை யானேன்

நீ பக்கம் வந்தால் போதும்

உனக்கு நான் செந்தாமரையாவேன்

rakini..

தாய்

தாய்


தனை மறந்து உனை சுமந்தாள்
மறு பிறவிதான் கண்டு

உனை எடுத்தாள்.

மழலையால் நீ....
தவழ தன் ரத்தத்தை

பாலாக்கினாள்.

இரவுகலை பகலாக்கி முத்துப்போல்

வளர்த்தெடுத்தாள்.

தாய் வேறு சேய் வேறு ஆனாலும;

தன் உயிர் நாள்
எல்லாம் சுமந்திருப்பாள்.

உன் மனம் மாறினாலும்...
என்றும் தாய்மனம் மாறாது.

நீ…..யும் தாயானாள் அப்போ……

புரியும் தாய்ப்பாசம்.

என் அருகில் வாராயோ

என் அருகில் வாராயோ...


அவள் சிரிப்பு எனக்கு சொர்க்கமானது
அவள் வார்த்தை எனக்கு வாழ்க்கையானது.

இதயத்தை உன்னிடம் கொடுத்த போது

தினம் கனவிலும் உனை தேடுனேன்.

அவள் உடையின் இடை அழகை கண்டேன்
அவள் சிரிப்பில் இதழ் விரியும் அழகைகண்டேன்.

உன் புன்னகையால் எனை வாட்டினாய்
உனை பார்க்கும் வேளையில் என்

இதயம் கால்களை நிறுத்துதடி

இருவிழியும் உனை பார்க்கும் போது

உன் உயிருடன் கலக்க விரும்புதடி.

எனக்குள் உலாவும் தேவதையே....
என் மூச்சிலும் நீ கலந்திட....
என்னருகில் நீ வாராயோ.


மீண்டும் தேடும் சுகம்




மீண்டும் தேடும் சுகம்

முற்றத்து மல்லிகையின்மூக்கைத் துழைக்கும் வாசனை

மண்ணில் என் பிஞ்சுக் காலின் சின்னச் சுவடுகள்

தத்தி நடக்கையில் சலங்கையின் சத்தங்கள்

சின்னக் குரலால் சங்கீத ஸ்வரங்கள்

நந்தவனத்துக்குள் சலனமில்லா மனங்கள்

அன்னையின் மடியில் சுதந்திரத் தூக்கம்

தந்தையின் கரத்தால் செல்ல அடிகள்

தூரத்தில் மணி ஓசை கேட்டிட

ஐஸ் பழத்துக்காய் அடம் பிடிக்கும் வயது.

ஐம்பது சதத்திற்க்காய் அப்பாவின் கையில் செல்ல முத்தம்.

சண்டை பிடித்து உணவு உண்ண அண்ணாவைத் தேடும் விழிகள்

அம்மாவின் பேச்சோடுசைக்கில் சுற்றுலா....

பள்ளிப் பருவத்தில்துள்ளித் திரிந்த காலங்கள்

புத்தகத்தின் நடுவினில் குட்டி போடும் மயிலிறகு.

புயலோடு விழுந்த மரத்தில்களவாடும் புளியங்காய்.

வயிற்றுக்குள் வலி தேடி கள்ளம் போடும் நாளில்உள்ளங்கை சிவக்க வைக்கும்வாத்தியாரின் பிரம்பு.

பிரியாவிடை கொடுத்துவிடைபெறும் பள்ளிக் கூடத்தில்கண்ணீர்த் துளியுடன் கைகாட்டும் நண்பர்கள்

இத்தனையும் தேடும் போது நெஞ்சுக்குள் ஓர் சுகம்

சுகத்துக்குள் ஓர் சோகம்..

எனக்குள் ஓர் முகம்


எனக்குள் ஓர் முகம்

நீயும் நானும் பேசும் போது
மனதில் இன்ப ஊஞ்சல் கண்டேன்.

நீயும் நானும் சந்தித்தபோது

உள்ளத்தில் ஓர் உணர்வு கண்டேன்.

நீ..சொல்லும் வேதம் கேட்டு

உன்னுள் ஓர் ஆசை கொண்டேன்.

நீ..நடந்த பாதை எல்லாம்

பூச்செடிகள் நட்டுவைத்தேன்.
நீ.....குளித்த நீர் எடுத்து பூச்செடியை

பூக்க வைத்தேன்.

அதில் உன் முகம் பார்த்தபோது

வண்டு உனை தீண்டாமல் வலை
போட்டு மூடிவைத்தேன்.

உதிர்ந்துள்ள பூக்களில் அடிவைத்து

நடக்கையில்அதில் பொற்க்காலம்
ஒன்றைக்கண்டேன்.

உன் மனதை நோகாது நான் காக்க
என் மனதை கல்லாக்கிக்கொண்டேன்.

கண்ணிர்த்துளியோடு என்

ஆசையையும் புதைத்து விட்டு...
உன் முகம் மட்டும்போதும் போதும்

என ஓரமாய் ஒதுங்கி விட்டன்.

------ ------ ------

ராகினியின் மேலும் பல கவிதைகளைப் படிக்க கீழ்வரும் தலைப்புகளில் சொடுக்குங்கள்.


1.ராகினியின் கவிதை முத்துக்கள்.

2.ராகினியின் கவி மலர்கள்

3.ராகினியின் கவிதை தென்றல்


------ ------ -------

தொடுப்புகள் [ LINKS ]

யாழ் கவி

தமிழ் மணம்

இலங்கை வானொலி நினைவலைகள்


நிலா எப்.எம்