
மீண்டும் தேடும் சுகம்
முற்றத்து மல்லிகையின்மூக்கைத் துழைக்கும் வாசனை
மண்ணில் என் பிஞ்சுக் காலின் சின்னச் சுவடுகள்
தத்தி நடக்கையில் சலங்கையின் சத்தங்கள்
சின்னக் குரலால் சங்கீத ஸ்வரங்கள்
நந்தவனத்துக்குள் சலனமில்லா மனங்கள்
அன்னையின் மடியில் சுதந்திரத் தூக்கம்
தந்தையின் கரத்தால் செல்ல அடிகள்
தூரத்தில் மணி ஓசை கேட்டிட
ஐஸ் பழத்துக்காய் அடம் பிடிக்கும் வயது.
ஐம்பது சதத்திற்க்காய் அப்பாவின் கையில் செல்ல முத்தம்.
சண்டை பிடித்து உணவு உண்ண அண்ணாவைத் தேடும் விழிகள்
அம்மாவின் பேச்சோடுசைக்கில் சுற்றுலா....
பள்ளிப் பருவத்தில்துள்ளித் திரிந்த காலங்கள்
புத்தகத்தின் நடுவினில் குட்டி போடும் மயிலிறகு.
புயலோடு விழுந்த மரத்தில்களவாடும் புளியங்காய்.
வயிற்றுக்குள் வலி தேடி கள்ளம் போடும் நாளில்உள்ளங்கை சிவக்க வைக்கும்வாத்தியாரின் பிரம்பு.
பிரியாவிடை கொடுத்துவிடைபெறும் பள்ளிக் கூடத்தில்கண்ணீர்த் துளியுடன் கைகாட்டும் நண்பர்கள்
இத்தனையும் தேடும் போது நெஞ்சுக்குள் ஓர் சுகம்
சுகத்துக்குள் ஓர் சோகம்..
1 comment:
ரோஜா சினிமாப் படப் பாடலை நினைவூட்டுகின்றது உங்கள் "மீண்டும் தேடும் சுகம்",பாராட்டுக்கள் ராகினி.
Post a Comment