Monday, November 14, 2005

இசையால் வசமானாள்



மனதுக்குப் பிடித்ததால்
உன்னை சரணடைந்தேன்
காற்றுப்போல் நான் விடும்
மூச்சும் உனக்கு தெரிவதில்லை.
எங்கே..செல்வது என்று.

அது காற்றோடு செல்லவில்லை.
உன் இசையோடு கலந்து விடும்போது...
என் செவிப்பறைகளை
உன் குரல்கள் தீண்டி
எனை இசைக்கு வசமாக்கியது.

கண்மூடிக்கிடந்தாலும்
என்னுள் இசைக்கின்ற உன் குரல்
என்னை ஈர்த்துக்கொள்வதால்
விழிக்க மறுக்கின்றது.

உன் பெயரை உச்சரிக்க முடியவில்லை.
அதை சொல்லவும் முடியவில்லை.
எனக்காக ..நீ.. தீட்டிக்கொள்ளும்
கவிதைகள் இசையுடன் கலக்கும் போது
உன் குரலோடு வரும்
இசைக்கு வசமானாள்


தெலைக்கட்ச்சியில் மாலை நேரம் தாலாட்டு நிகழ்ச்சி பார்த்துக்கொண்டு இருந்தேன்.

தீடிரென மேலே இருக்கும் கவிதை வாசிக்கப்பட்டது.
வாசித்து முடிந்ததும் றாஜ றாஜ சோழன் நான் எனை ....என்ற பாடல் போடப்பட்டது..
இந்தகவிதையை சிந்தித்து எழுதியவர்
யார் என்பதை சொல்லாத காரணம் என்ன..? கவிதை என்பது ஒரு உயிருக்கு சமம்.
அதை எடுத்தால் பெயரையும் சொல்லும் போது எழுத்தாளர்களுக்கு மனதில் சந்தோசம் மலர்ந்து இன்னும் எழுதத தூண்டும்.

ஆகவே என்கவிதைகளை எடுத்து தாலாட்டு நிகழ்ச்சியில் இனைத்தால் பெயரை செல்லுங்கள்.

12 comments:

Vaa.Manikandan said...

//என்னுள் இசைக்கின்ற உன் குரல்
என்னை ஈர்த்துக்கொள்வதால்
கண் விழிக்க மறுக்கின்றது.//
நல்ல இருக்கு.இன்னும் கொஞ்சம்,செழுமைப் படுத்தலாமோ?

rahini said...

nanrikal
manikandan .balgans

rahini said...

nanri ruupa

மேமன்கவி பக்கம் said...

காதல் உணர்ச்சியை மென்மையாக சொல்ல முடிகிறது
உங்களால்
பாராட்டுக்கள்
மேமன்கவி

rahini said...

உங்கள் வருகைக்கு நன்றி மேமன்கவி.

N Suresh said...

இசையால் தொலைக்கப்பட்ட
தன்னை தேடுகிறது
பாடல் வரிகள்

rahini said...

இசையிடமே என்னை தொலைத்துவிட்டேன்
சுரேஸ் நன்றி உங்கள் வரவுக்கு

தினேஷ் said...

மென்மையான இசையாய் ஒரு கவிதை...

தினேஷ்

rahini said...

isaiku vasamaneen nanri

Anonymous said...

கவிதை மூலம் இசைக்குள் இசைந்துவிட்டீர்கள்.. அற்புதம்.. வாழ்த்துக்கள்

rahini said...

இரண்டும் என் வசந்தம்.

S.vijayan said...
This comment has been removed by a blog administrator.