
என்னை தொந்தரவு செய்யாதே.
---------------------------------------
என் புன்னகை கேட்டு நீ..
உன் மனதை தொலைத்ததுக்கு..
நான் காரணமாய் இருக்க முடியுமா..?
என்னை உன்னிடம்
தொலைத்துவிட்டேன்
என்று தொந்தரவுசெய்யாதே..
அமைதியுடன் இருந்த என் இதயக்கடலில்...
உன் புன்னகை என்ற கல் எறிந்து
அலைகள் கொந்தளிப்பது போல்
என் மனதை கொந்தளிக்கவைத்தது
என்று சொல்லி...
என்னைதொந்தரவு செய்யாதே.
என் புன்னகை..என்னுள் பிறப்போடு வந்த....
புன்னகைப்பூக்கள் என்று சொல்லியும்
நீ..உன் மனதை.. தொலைத்துவிட்டேன்
என்றுதொந்தரவுசெய்யாதே.
.நீ..பார்த்தாய் நானும் பார்த்தேன்.
அதற்கு.உன் இருவிழியில் இருந்து..
வந்த கரு நிறக்குண்டுகள்
என் இதயத்தை துளைத்துவிட்டது
என்று..ஏன் என்னை தொந்தரவு
செய்கின்றாய்.
மழைவரும்போது..தானே..
நான் வருகின்றேன்.
நீ..நான் வந்ததால் மழை என்று
சொல்லி என்னை ஏன்டா..
தொந்தரவு செய்கின்றாய்.
நீ..புதியவனானது..என்னால்..
மனிதனாகியது...என்னால்.
உன் பேனை தினம்
கவிதை தொடுப்பது..என்னால்
உன் மனதில் புத்துணர்ச்சி
தோண்றியது
என்னால்என்று சொல்லிக்கொண்டு
திரியும்போது...என் மனதில்
உன்னை... நானும்
காதல் செய்கின்றேன்..ஆனால்..
தொந்தரவு செய்யாதே..
என்னை.
------------
rahini
17 comments:
nanri rupaa ,rosev varukaikku
nalama...? iruvarum
இயல்பான கவிதை.
அவன் தொந்தரவு செய்றதுக்கு காரணம், அவன் பக்கத்திலிருக்கும் நண்பர்களாயிருக்கக் கூடும். அவனுங்கதான், 'டேய் இந்தப் பொண்ணுக்கு உன் மேல ஒர் கண்ணுடா" என்று சொல்லி சும்மா கிடக்கிறவனுங்களையும் தூக்கிவிட்டுடுவானுங்க...
nanri m.malik irukkalam ithatku oru vali seiya vendiyathuthan.
உங்கள் வருகைக்கு நன்றி ராகினி. தாங்கள் அளித்த சுட்டிக்கு நன்றி. அவ்வப்போது சென்று பாடல்களைக் கேட்பேன்.
காதல் உணர்ச்சியை மென்மையாக சொல்ல முடிகிறது உங்களால்
பாராட்டுக்கள்
மேமன்கவி
உங்கள் வருகைக்கு நன்றி மேமன்கவி.
காதலின் ரணமா இது!
பாராட்டுக்கள் ராகினி.
அன்புடன்
இலக்கியா
அடடா எப்படிங்க உங்களால் இப்படியேல்லாம் !!! :-))
அழகான கவிதை!
வாழ்த்துக்கள் ராகினி!!
அன்புடன் ஜோதிபாரதி.
http://jothibharathi.blogspot.com/
அன்பினிய ராகினி
தொந்தரவு செய்யத்தூண்டும் கவிதையிதற்கு " என்னை தொந்தரவு செய்யாதே" என்று பெயரிடல் நியாயமோ, சொல்!
இந்த கவிதை ஒரு வேளை எனக்கு வந்திருந்தால்... என்று யோசித்தேன். அப்படியென்றால் இந்த கவிதைக்கு இப்படியெல்லாம் பதில் எழுதி மகிழ்ந்திருப்பேன்.
//என் புன்னகை கேட்டு
நீ..உன் மனதை தொலைத்ததுக்கு..
நான் காரணமாய் இருக்க முடியுமா..?//
நீ புன்னகைத்ததே என்
மனதை தொலைக்கத்தானே?
இனி
காரணம் யாரென்று
யான் சொல்ல வேண்டுமோ?
//தொலைத்துவிட்டேன்
என்னை
உன்னிடம் தொலைத்து
விட்டேன்
என்று தொந்தரவு
செய்யாதே..//
தொந்தரவுகளை
வரவேற்கிறாய்
//அமைதியுடன் இருந்த
என்இதயக்கடலில்...
உன் புன்னகை என்ற கல் எறிந்து
அலைகள் கொந்தளிப்பது போல்
என் மனதை கொந்தளிக்கவைத்தது
என்று சொல்லி...
என்னைதொந்தரவு
செய்யாதே.//
பெருங்கடலில் ஒரு கல் - அது
என்ன செய்து விட முடியும்?
எனது பெருங்கடலோரப்புரம்
உந்தன் சுனாமியால்
மூழ்கிவிட்டன!
//என் புன்னகை..
என்னுள் பிறப்போடு வந்த....
புன்னகைப்பூக்கள்
என்று சொ ல்லியும்
நீ..உன் மனதை..
தொலைத்துவிட்டேன்
என்றுதொந்தரவு
செய்யாதே.//
சொ ல்லியும் - என்று ஏன் எழுதினாய் நீயென்று நான் கேட்கமாட்டேன்.
சொல்ல மறந்த மௌனத்தை அந்த இடம் நிறப்பிக்கொண்டிருக்கிறது.
தொலைத்துவிட்டவன்
புலம்பினால் தான்
தொலைந்துபோனது
மகிழ்ந்திருக்கும்!
//நீ..பார்த்தாய் நானும்பார்த்தேன்.
அதற்கு.
உன் இருவிழியில் இருந்து..
வந்த கரு நிறக்குண்டுகள்
என் இதயத்தை துளைத்துவிட்டது
என்று..ஏன் என்னை தொந்தரவு
செய்கின்றாய்.//
நீ பார்த்த பார்வைக்கு நன்றி
என் இதயத்தில் துளைந்து
உயிருக்குள் நுழைந்த உன்னில்
மகிழ்கிறேன், நான்!
//மழைவரும்போது..தானே..
நான் வருகின்றேன்.
நீ..நான் வந்ததால் மழை என்று
சொல்லி என்னை ஏன்டா..
தொந்தரவு செய்கின்றாய்.//
நீ மயிலென்கிறாய்
நான் மழையாகிட
மழை முடிந்ததும்
மயிலின் ஆட்டமும் முடியும்
மயிலிக்கு
மூச்சுமுட்ட
மழை மட்டும்
கண்ணீர் சொட்டுக்களை - அதன்
பூமித்தாயிடம்
பகிர்ந்து கொண்டிருக்கும்
//நீ..புதியவனானது..
என்னால்..
மனிதனாகியது...
என்னால்.
உன் பேனை தினம்//
பேனையா
பேனாவா - கொஞ்சம்
தெளிவு படுத்து!
//கவிதை தொடுப்பது..
என்னால்//
உண்மை தான்!
கவிதை நீ
ஒரு கவிதையை
எழுதிக்கொண்டிருக்கிறாய்!
//உன் மனதில் புத்துணர்ச்சி தோண்றியது//
தோன்றியது - என்பது தானே சரி.
//என்னால்
என்று சொல்லிக்கொண்டு
திரியும்போது...
என் மனதில் உன்னை... நானும்
காதல் செய்கின்றேன்..//
காதல் செய்கிறேன் என்று
ஒரு கவிதை வெளிப்படுத்தின பிறகு
காதலிக்கப்பட்டவன் ( அவன் யாரோ)
படும் அவஸ்தையின் வெளிப்பாடுகளை
தொந்தரவு என்ற ஒற்றை வார்த்தைக்குள்
அடக்குவது நியாயமோ சொல்!
//ஆனால்..
தொந்தரவு செய்யாதே..
என்னை.//
நல்ல கவிதையும் எழுதிவிட்டு
தொந்தரவும் செய்யாதே என்றால் எப்படி?
பின்னூட்டமிட்டு தொந்தரவு செய்து
மகிழ்ந்தேன்.
மகிழவைத்த
உங்கள் கவிதைக்கு நன்றி.
உங்கள் எழுத்துப்பிழைகளை சொன்னேன். பின்னூட்டமிடுகையில் என் எழுத்துப்பிழைகளும் இருக்கலாம்.
ஆனலது பரவாயில்லை. ஏனெனில் அரிசியில் கற்கல் இருக்கக்கூடாது, கற்கலில் அரிசி இருக்கலாம்:-)
வாழ்த்துக்கள்
அன்புடன்
என் சுரேஷ்
உங்கள் கவிதையை படித்து நான் தொந்தரவு செய்வதை நிறுத்திவிட்டேன்
நல்ல வரிகள் நன்றி
வணக்கம் ராகினி அவர்களே!
தங்கள் இணையப்பதிவுகள் சிலபார்த்தேன். தங்களின் பதின்வயதுகளிலான (Teen age) காதல் நினைவுகளின் வெளிப்பாடே உங்கள் கவிதைகள் என நினைக்கிறேன். புலம்பெயர் வாழ்க்கையின் மகாத்தனிமை இவ்வாறான வலிகளை மேலும் கிளறி விடுமென்றே நினைக்கிறேன்.
தமிழ் இணையதளங்களுடன் அண்மைக்காலமாகவே எனது பரிச்சயம் இருக்கிறது. ஆனாலும் நான் பார்வையிட்ட தளங்களுள் பெரும்பாலானவை தாயகம் தொடர்பான மீள்பதிவுகளாகவே இருக்கின்றன. புலம்யெர்ந்த நிலையில்தான் தாயகத்தில் அவர்கள் எவ்வளவற்றை இழந்திருக்கிறார்கள் என்பதை உணர்கிறார்கள்.
உங்கள் எழுத்திலும் அதை உணரமுடிந்தது. காலம் எதையும் மாற்றவல்லது: மறக்கடிக்க வல்லது. உங்கள் விடயத்தில் அப்படியல்ல போலிருக்கிறது.
இணையமுயற்சிக்கு வாழ்த்துக்கள். தேவதை O.K., தேவன் யாரோ..?!
நன்றி.
ஆ.கோகுலன்
ராகினி அவர்களுக்கு,
அருமையான வரிகளை கொண்ட அழுகான அன்பு கவிதை...
தினேஷ்
apadiyaa nanri kal pala
ராகினி மேடம்...
இன்று தான் சிறிது நேரம் கிடைத்தது.. இந்த கவிதையின் ஏக்கம் உங்கள் எனக்கு அனுப்பிய ஒலித்தொகுப்புக்களில் அதிகமாக தெரிந்தது. அருமை அருமை வாழ்த்துக்கள்.
apadiyaa.....
என் புன்னகை கேட்டு
நீ..உன் மனதை தொலைத்ததுக்கு..
நான் காரணமாய் இருக்க முடியுமா..?
என்னை உன்னிடம் தொலைத்துவிட்டேன்
என்று தொந்தரவுசெய்யாதே..
super
Post a Comment