
தீபாவளி இரண்டில் உன் முகம்
என்னை...எண்ணையாக்கி
தினம் தினம். நான் தீபம்
ஏற்றுகின்றேன்
ஏன் தெரியுமா....?
அதில் உன் முகம் தெரிவதை
காண்பதற்கே...
என்னை விட உன் நலம் விரும்பி
என்னை எண்ணையாக்கிக் கொண்டு
இருக்கின்றேன்
நான் வாழ்வதை விட
உன் வாழ்வில் இன்பம் காண
ஆசை கொண்டேன்
அதனால் தான் என்னை
எண்ணையாக்க விரும்பினே;
---
நான் இப்போ.. அதிகமாக...
கடிகாரம் பார்க்கின்றேன்
காரணம்...
உன் வரவை எதிர் பார்த்து
ஆனால் நீ.. என்னை
ஏமாற்றிய நேரங்களைத்தான் கடிகாரம்
எனக்கு காட்டுகிண்றது
செல்லமே..
இந்தத் தீபாவளியோடாவது
நீ...என்னை...முழுப் பவுர்ணமியாக்கிவிடு.
அன்பே..
வானத்தில் இருக்கும் நிலவு
தேயற்றும்
ஆனால் நிலவாக உன் இதயத்தில்
இருந்துஒளி வீசும் என்னை தேய விடாதே...
இதுவே.. நீ..எனக்கு தீபாவளிக்குத் தரும்
புதிய ஆடை.என நான்
நினைத்துக்கொள்வோன்.
rahini
8 comments:
please reduce spelling mistakes.other than this, good one
oh... nanari thagkalukku
ஏங்கிய ஏக்கங்கள் ஒன்று கூடி
வளர்ந்துகொண்டே கரையும்
நிலாவிடம் ஆறுதல் கேட்கிறது
அன்பினிய ராகினி
கவிதைக்கு நல்ல தலைப்பு
காதலர் தினம்...05
//உன்னிடம் காதல் கொண்டதால்
பிறந்த பயனை அடைந்தேன்
உனை சந்திக்கும் போதெல்லாம்
என்னை உணர்ந்தேன்//
நல்ல வரிகள், ரசித்தேன்.
//மனதை திறந்து மனச்சாட்சியை
கேட்டபோது பரந்த மனதுடன்
உன் காதல்வெளிப்பட்டது.//
காதல் வெளிப்பட
ரகசியம் இது தானோ?
//உன் பேச்சும் உன் சிரிப்பம்
உன் குறும்பும்கேட்டபோது
என் மனம் கெஞ்சியது//
உன் முகம் கான...
கான... தவறு, காண என்று திருத்தவும்
//இதுவரை..யாரையும் விரும்பாமல்
இருந்தேன்.
இதயத்தின் கதவை இறுகப் பூட்டிவைத்தேன்//
அவன் காதலின்
சாவியோடு வந்தானோ?
//எங்கிருந்தே..வந்தாய்.....//
எங்கிருந்தோ என்று திருத்தவும்
//எனை அழைத்தாய் எனை கவர்ந்தாய்
என் இதயப் பூட்டைஉடைத்து//
உடைத்தது தவறு
இதி தீவிர வாதம்
பாவம் இதயம்
அதை திறந்திருக்கலாம்
காதலால்!
//எனக்குள் காதலை வளர்த்தாய்
நம்காதலுக்கு காதலர்தினத்தில்
முத்திரை பதிக்கின்றேன்
நித்திரையின்றி.//
பார்த்து கவிதாயினியே
உறக்கமில்லையேல்
மருத்துவமனைகள்
பெருகிவிடும்!
//அன்பே..காலை எழுந்து தபாலை எதிர்பார்க்கின்றேன்
உன் காதலர்தின பரிசுக்காய்.//
பரிசிற்காய என்று எழுதினால் அது சரியோ...
அது சரி..
காதல் காதலன் அவனின் ஆன்மா இவை இணைந்த பின் எதற்கிந்த தபால்க்காரன் வழியே காதற்பரிசு:-)
நல்ல கவிதை, ரசித்தேன், வாழ்த்துக்கள்
அன்புடன்
என் சுரேஷ்
வணக்கம் சுரேஸ் கவிதையை அதிகமாய் ரசித்து படித்ததை உணர்கின்றேன்
காரணம் உங்கள் ஒவ்வொரு எழுத்தும் சொல்லுகின்றது.
நன்றி
வணக்கம் ராகினி அவர்களே!
தங்கள் இணையப்பதிவுகள் சிலபார்த்தேன். தங்களின் பதின்வயதுகளிலான (Teen age) காதல் நினைவுகளின் வெளிப்பாடே உங்கள் கவிதைகள் என நினைக்கிறேன். புலம்பெயர் வாழ்க்கையின் மகாத்தனிமை இவ்வாறான வலிகளை மேலும் கிளறி விடுமென்றே நினைக்கிறேன்.
தமிழ் இணையதளங்களுடன் அண்மைக்காலமாகவே எனது பரிச்சயம் இருக்கிறது. ஆனாலும் நான் பார்வையிட்ட தளங்களுள் பெரும்பாலானவை தாயகம் தொடர்பான மீள்பதிவுகளாகவே இருக்கின்றன. புலம்யெர்ந்த நிலையில்தான் தாயகத்தில் அவர்கள் எவ்வளவற்றை இழந்திருக்கிறார்கள் என்பதை உணர்கிறார்கள்.
உங்கள் எழுத்திலும் அதை உணரமுடிந்தது. காலம் எதையும் மாற்றவல்லது: மறக்கடிக்க வல்லது. உங்கள் விடயத்தில் அப்படியல்ல போலிருக்கிறது.
இணையமுயற்சிக்கு வாழ்த்துக்கள். தேவதை O.K., தேவன் யாரோ..?!
நன்றி.
ஆ.கோகுலன்
அருமையான வரிகள்...
தினேஷ்
ungkal varukaiku nari dinesh
Post a Comment