
காதல் தினம். 14 .2 12
------------------
இருந்தேன்
தனிமையில் சிறையில் சிலகாலமாய்
வாழ்ந்தேன்
என்னை நான் தேடிக்கொள்ளும் போது
எங்கோ இருந்து என்னை அழைத்தாய்
யார் நீ....?
உன் பெயர் என்ன ?
உனது ஊர் எது ?
என்று நினைத்து கேள்வி தொடுப்பதற்குள்
என் அனுமதி இன்றி என் இதயத்தை திருடி
உனது இதயத்தில் பூட்டிக்கொண்டாய்.
அந்த நிமிடப்பொழுதில்
எனக்கும் தெரியாமல்.
மெல்ல மெல்ல நடக்க தொடங்கினேன்
உனது குரலை கேட்டு சிந்தனைகளை பறக்கவிட்டு!
எனக்குள் போறாட்டதை எழுப்பி!
என்னை நான் திரும்பி பார்த்தநொடிப்பொழுதில்!
புடவைக்கடைக்குள் நின்றுதிக்குமுக்காடினேன்"
அந்த நிமடத்தில்""""என்னை உனக்கே அர்பணித்தேன்
மனதால்
உன்னிடம் சொல்லாமல்
காதல் பரீச்சையில் தோற்றுவிடுவேனா:.
என்றபயத்தில் காதலை சொல்ல தயங்கினேன்.
யார் நீ.. என்று தெரியாமல் தவித்தேன்!
வொதும்பி துடித்தேன்!
விழிகள் தேடத்தொடங்கியது
உதடுகள் பேசத்தயங்கியது
காதல் பரீச்சையை உன்னிடம் விட்டேன்
ஏழாம் அறிவாக.
நீயும் தயங்கினாய்...நானும் தயங்கினேன்-
இருவரும் முடிவின்றி தயங்கும்போது...
நானே உன்னிடம் கூறமுற்பட்டேன்
முடியவில்லை!
உன்னை பிரியும் சில மணிநேரத்தை
கண்டு கண்டு வொதும்பி
அழத்தொடங்கும் நிமிடத்தில் என் காதலை சொன்னேன்.
சொன்ன நிமிடத்தில் இருந்தே
என் உடல் உயிர்அத்தனையும் உனது பொறுப்பு
என சொல்லி விடைபெற்றேன்
சிறகொடிந்த பறவைபோல்
திசைமாறி பயணித்தேன்
பயணிக்கும் ஒவ்வொரு நிமிடமும்
புழுவாக துடித்தேன்.
பார்வையிடும் விழிகள் நான்கும்
கண்ணீரில் மதிக்கும் நேரம்
கரைந்தோடும் கண்ணீiரை
வாணத்தில் இருந்து மழையாக பொழிந்தேன் நீ..இருந்தகடற்கரையில்;
தேடுகின்றேன் உன்னை மட்டும்
நேசிக்கின்றேன் உன்னைமட்டும்
சுவாசிக்கின்றேன் உன்னை மட்டும்
முதல்வசந்தம்
முதல் முத்தம்
முதல் வார்த்தை
முதல் கவிதைஎல்லாமே நீ எனக்கு
காலத்தை கடந்து செல்லாதே
நேரத்தை மறந்து செல்லாதே
நாற்களை விழத்தி செல்லாதே
இதுவரை நீ இருந்த திசை மறந்து
இனி வரும் திசையை கண்டு மகிழ்வு அடைந்துகொள்
உன்னை என்னி வழும் என்னை
மறந்துவிடாதே
உன்கையில் என்னை எடுக்கும் வரை
மறந்து தூங்கிவிடாதே
நேசத்தை தெழிவு படுத்த
காதலளர் தினம் தேவையில்லை
நம் இருவர் மனமும் தெளிவாக இருந்தால்